2020ஆம் ஆண்டில் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் இன்று காலை தொடங்கியது.
ஆளுநர் உரையை புறக்கணித்து சட்டப்பேரவை கூட்டத்தொடரிலிருந்து பிரதான எதிர்க்கட்சியான திமுக, காங்கிரஸ், அமமுக, முஸ்லீம் லீக், மனித நேய ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட கட்சியினர் வெளிநடப்புச் செய்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது:
ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக சார்பில் வெளிநடப்புச் செய்துள்ளோம். தமிழ்நாட்டில் கடன்தொகை நான்கு லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. தொழில் வளர்ச்சி கிடையாது. புதிய வேலைவாய்ப்புகளும் இல்லை. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டுமென தற்போதுள்ள அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரிடம் அனுப்பிவைத்துள்ளது.