தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தேர்தல் பரப்புரை குறித்து விவாதிக்க டிச., 20இல் திமுக கூட்டம்! - விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்

மாவட்ட நிர்வாகிகளைக் கொண்டு தேர்தல் பரப்புரைக்கான வியூகங்களை வகுக்கும் கூட்டத்தினை திமுக நடத்த திட்டமிட்டுள்ளது. இது டிசம்பர் 20ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.

DMK to hold discussion about state election campaign on December 20
DMK to hold discussion about state election campaign on December 20

By

Published : Dec 12, 2020, 10:47 PM IST

சென்னை: டிசம்பர் 20ஆம் தேதி மாவட்ட நிர்வாகிகளுடனான கூட்டத்துக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக முன்னோட்டத்தினை தொடங்கியிருக்கும் எதிர்க்கட்சியான திமுக, காணொலி காட்சிகள் மூலம் ‘தமிழகத்தை மீட்போம்’ என்ற பரப்புரையை இரண்டு கட்டம் முடித்திருக்கிறது.

டிசம்பர் 12ஆம் தேதி முதல் இந்த மாதம் இறுதிவரை, மூன்றாவது கட்டமாக இந்த பரப்புரையை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த மூன்றாவது கட்டம் ராமநாதபுரம், திண்டுக்கல், கடலூர், திருவள்ளூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களை அடங்கி இருக்கும் என்று கட்சி தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சூழலில், திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழியும், இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற பரப்புரையைத் தொடங்கி நடத்திவருகின்றனர்.

ஜனவரி மாதம் திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரையைத் தொடங்க திட்டமிட்டிருக்கும் வேளையில், மாவட்ட நிர்வாகிகளைக் கொண்டு தேர்தல் பரப்புரைக்கான வியூகங்களை வகுக்கும் கூட்டத்தினை திமுக நடத்த திட்டமிட்டுள்ளது. இது டிசம்பர் 20ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.

ABOUT THE AUTHOR

...view details