தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி ரஜினிகாந்த் சிந்தித்துப் பேச வேண்டும்' - ஸ்டாலின் - ரஜினிகாந்த்

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அச்சட்டம் பற்றி ரஜினிகாந்த் ஆராய்ந்து, சிந்தித்துப் பேச வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

dmk
dmk

By

Published : Feb 6, 2020, 2:41 PM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சியினர் சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டு நடைபெற்றுவருகிறது. காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் கோவளம் பேருந்து நிலையம் அருகே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் இன்று நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பொதுமக்களைச் சந்தித்துக் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விளக்கமளித்தார். பின்னர், அவர்களிடம் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்தையும் பெற்றார்.

மு.க. ஸ்டாலின் பொதுமக்களைs சந்தித்து குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விளக்கம் அளித்தார்

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மு.க. ஸ்டாலின், ”மாணவர்கள் ஆராய்ந்து, சிந்தித்துப் போராட வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருக்கிறார். முதலில் ரஜினிகாந்த் இந்த சட்டத்திருத்தத்தால் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என ஆராய்ந்து, சிந்தித்துப் பதிலளித்திருக்க வேண்டும். இச்சட்டத்தினால் பாதிப்புகள் ஏற்படும் என்பதை அவர் உணர்ந்தால், ஒருவேளை அவர் கூறிய கருத்தை மாற்றிச் சொல்லுவார் என நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.

குடியுரிமை சட்டம் பற்றி ரஜினிகாந்த் சிந்தித்து பேச வேண்டும் - ஸ்டாலின்

இந்நிகழ்ச்சியில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: 'இஸ்லாமியர்களுக்குப் பாதிப்பு என்றால் முதல் ஆளாக குரல் கொடுப்பேன்' - ரஜினிகாந்த்

ABOUT THE AUTHOR

...view details