தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மு.க. ஸ்டாலினின் மலரும் நினைவுகள் - பள்ளி நண்பர்களுடன் சந்திப்பு!

சென்னை: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தான் படித்த பள்ளிக்குச் சென்று ஆசிரியர்கள், நண்பர்களுடன் கலந்துரையாடினார்.

school
school

By

Published : Jan 4, 2020, 11:45 PM IST

சேத்துப்பட்டு சென்னை கிறிஸ்தவக் கல்லூரிப் பள்ளியில் 1970ஆம் ஆண்டு படித்த மாணவர்கள் ஒன்றுகூடும் நிகழ்வு நேற்றும், இன்றும் என இரண்டு நாட்கள் நடைபெற்றது. அதே ஆண்டில் அப்பள்ளியில் படித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததால் இந்நிகழ்ச்சியில் அவர் தனது மனைவி துர்காவுடன் பங்கேற்றார்.

ஸ்டாலின் தான் படித்த வகுப்பிற்குச் சென்று, மேசையில் அமர்ந்து பள்ளியில் பயின்ற அந்நாட்களை நினைவுகூர்ந்தார். அந்த நேரத்தில் அங்கு பணிபுரிந்த ஆசிரியர்கள், நண்பர்களுடன் உரையாடி மகிழ்ந்த ஸ்டாலின், தனது நண்பர்கள், ஆசிரியர்களுடன் இணைந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

ஆசிரியரிடம் அடி வாங்கியது, வகுப்புகளை ’கட்’ அடித்தது மனதில் தோன்றியது - ஸ்டாலின்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றதால் மகிழ்ச்சியாக உள்ளேன். அந்த மகிழ்ச்சியை, நான் படித்த பள்ளியின் பழைய நண்பர்கள், எனக்குப் பயிற்றுவித்த ஆசிரியர்களுடன் சேர்ந்து கொண்டாடும் ஒரு நல் வாய்ப்பு இன்று அமைந்துள்ளது.

நண்பர்கள், ஆசிரியர்களைச் சந்தித்தது மகிழ்ச்சியைத் தருகிறது - ஸ்டாலின்

50 ஆண்டுகளுக்குப் பிறகு என் பள்ளி நண்பர்கள், ஆசிரியர்களைச் சந்தித்தது மகிழ்ச்சியைத் தருகிறது. இதை மறக்க முடியாத நாளாக நான் கருதுகிறேன். நான் இப்பள்ளியில் முதலில் 6 'A ' வகுப்பில் சேர்க்கப்பட்டேன். ஆசிரியரிடம் அடி வாங்கியது, வகுப்புகளை ’கட்’ அடித்தது போன்ற மலரும் நினைவுகள் மனதில் தோன்றியது.

நான் இந்தப் பள்ளிக்கு மேயராக, சட்டமன்ற உறுப்பினராக, துணை முதல்வராக, உள்ளாட்சித் துறை அமைச்சராக வந்துள்ளேன். தற்போது எதிர்கட்சித் தலைவராக வந்துள்ளேன். நாளை எப்படி வருவேன் என்று பிறகு தெரிவிக்கிறேன்” எனக் கூறினார்.

இன்று எதிர்கட்சித் தலைவராக வந்துள்ளேன் நாளை எப்படி வருவேன் என்று பிறகு சொல்கிறேன் - ஸ்டாலின்

இதையும் படிங்க: கிரிக்கெட் விளையாடிய முதலமைச்சர்!

ABOUT THE AUTHOR

...view details