தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பெரியார் குறித்து ரஜினி சிந்தித்து பேசவேண்டும் - மு.க. ஸ்டாலின்

சென்னை: பெரியார் குறித்து ரஜினிகாந்த் சிந்தித்து பேசவேண்டுமென திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

speech
speech

By

Published : Jan 21, 2020, 4:34 PM IST

திமுக அவசர செயற்குழுக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என மொத்தம் 550 பேர் கலந்துகொண்டனர்.

உள்ளாட்சித் தேர்தலில் மாபெரும் வெற்றியை வழங்கிய தமிழ்நாடு மக்களுக்கு நன்றி தெரிவித்தும், மீதமுள்ள ஒன்பது மாவட்டங்களுக்கும் உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்திட வேண்டுமெனவும், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்க அனுமதிக்க மாட்டோம் என அறிவித்திட வேண்டும் என்றும், இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை என்ற அதிமுக அரசின் வஞ்சக நாடகத்திற்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும், அதிமுகவின் முகமூடியை கிழித்தெறியவும் சபதமேற்போம் எனவும் ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், “திமுக செயற்குழுக் கூட்டத்தில் முக்கியமான ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வருகின்ற 24 ஆம் தேதி தேசிய குடியுரிமைச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக திமுக கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் “ எனத் தெரிவித்தார்.

மேலும், பெரியார் குறித்து ரஜினிகாந்த் கூறிய கருத்து தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டதற்கு, ’ரஜினிகாந்த் அரசியல்வாதி இல்லை, அவர் ஒரு நடிகர். பெரியார் பற்றி ரஜினி சிந்தித்து பேச வேண்டும்’ என்றார்.

பெரியார் குறித்து ரஜினி சிந்தித்து பேசவேண்டும்

இதையும் படிங்க: ‘சாரி... பெரியார் குறித்த கருத்திற்கு மன்னிப்பு கேட்க முடியாது’ - ரஜினி திட்டவட்டம்

ABOUT THE AUTHOR

...view details