தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சட்டக் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு தேவை - திமுக மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் - மத்திய அரசின் கல்வித்துறை அமைச்சர்

திமுகவின் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், சட்டக் கல்லூரிகளில் அகில இந்திய மற்றும் மாநில இட ஒதுக்கீடுகள் முறையாக பின்பற்றவில்லையெனில், சட்ட ரீதியான விளைவுகளைச் சந்திக்கநேரிடும் என்று தெரிவித்துள்ளார்.

இட ஒதுக்கீடு
இட ஒதுக்கீடு

By

Published : Jan 18, 2022, 5:24 PM IST

டெல்லி: இந்திய முழுவதும் உள்ள சட்டப்பல்கலைக்கழகங்களில் பட்டியல் இனம் (SC), பழங்குடியினர் (ST) மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC) மாணவர்கள் உரிய வாய்ப்பை பெற முறையான இட ஒதுக்கீடு வழங்கப்படவேண்டும் என்றும் இல்லையென்றால், சட்ட ரீதியான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என திமுக எம்பியும் மூத்த வழக்கறிஞருமான வில்சன் அனைத்து மாநில சட்டப்பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

திமுக மாநிலங்களவை உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன், மத்திய அரசின் கல்வித்துறை அமைச்சர், சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் மற்றும் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள், சட்டப்பல்லைக்கழக துணைவேந்தர்கள் உள்ளிட்டோருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

கிடப்பில் தேசிய, மாநில இட ஒதுக்கீடுகள்

அந்தக் கடிதத்தில் அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் இட ஒதுக்கீடு முறையாகப் பின்பற்றுவது அரசியலமைப்பு சட்டத்தின் கட்டாயமானது என்று ஏற்கனவே கடிதம் எழுதியதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த கடிதத்தின்படி, லக்னோ மற்றும் கொச்சியில் உள்ள தேசிய சட்டப்பள்ளிகளில் மட்டுமே மாநில இடதுக்கீடு முறையைச் சரியாகப் பின்பற்றுவதாகத் தெரிவித்துள்ளதாகவும், ஆனால் மற்ற மாநிலங்களில் உள்ள சட்ட பல்லைக்கழகங்கள், தேசிய சட்டப்பள்ளிகளில் பட்டியல் இனம் (SC), பழங்குடியினர் (ST) மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC) பிரிவினருக்கான அரசியலமைப்பு சட்ட இட ஒதுக்கீடோ? மாநில இட ஒதுக்கீடோ? பின்பற்றப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

திமுக மூத்த வழக்கறிஞர் பி.வில்சன்

யாரேனும் வழக்குத் தொடர்ந்தால் மாநில இட ஒதுக்கீடு கட்டாயம்

அவர், திமுக முன்னெடுத்துச்சென்ற சட்டப்போரட்டத்தின் விளைவாக, மருத்துவ பட்டப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC) பிரிவினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீடு அறிக்கை செல்லும் என உச்சநீதிமன்றம் அண்மையில் வழங்கிய வரலாற்றுத் தீர்ப்பு வழங்கியதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய சட்டப்பல்கலைக்கழங்களிலும் இட ஒதுக்கீடு தொடர்பாக யாரவது ஒருவர் வழக்கு தொடர்ந்து, இட ஒதுக்கீடு பெறும்வரை காத்திருக்காமல், சட்டப்படிப்பில் பட்டியல் இனம் (SC), பழங்குடியினர் (ST) மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC) மாணவர்களுக்கு உரிய வாய்ப்பளிக்க அகில இந்திய ஒதுக்கீடு, மாநில அரசின் உரிய இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

உரிய இட ஒதுக்கீடு பின்பற்றவில்லை என்றால் சட்ட விளைவுகளைச் சந்திக்கவேண்டும் என்று எச்சரித்துள்ளார்.

இதையும் படிங்க: புதுச்சேரியில் வரும் 31ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details