வேலூர்: தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் இலட்சுமணனின் இறுதிசடங்கு நேற்று (ஆக். 13) மதுரையில் நடந்தது. அப்போது, அரசு தரப்பில் மரியாதை செலுத்த சென்றிருந்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காரின் மீது பாஜகவினர் காலணிகளை வீசினர்.
இந்நிலையில், இச்செயலை கண்டித்தும், இதில் தொடர்புடைய பாஜகவினர் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோரை கைது செய்ய கோரியும், வேலூர் மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினர் நேற்று மாலை வேலூர் கிரீன் சர்க்கில் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அண்ணாமலையின் புகைப்படத்தை காலணியால் அடித்து கண்டன கோஷமிட்டனர். மேலும், அவர்களின் சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டது.