தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

’இந்தியாவிலேயே முறையாக தேர்தல் நடத்தும் ஒரே அரசியல் இயக்கம் திமுக’ - ஆர்.எஸ். பாரதி - திமுக பொதுத் தேர்தல்

சென்னை: திமுகவின் 15 ஆவது பொதுத்தேர்தலை முன்னிட்டு முதல்கட்டமாக கிளைக் கழகத் தேர்தலை காஞ்சிபுரத்தில் இன்று அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி தொடங்கி வைத்தார்.

election
election

By

Published : Feb 21, 2020, 7:52 PM IST

திமுகவின் 15ஆவது பொதுத் தேர்தல் சென்னை, மதுரை, கோவை தவிர மற்ற மாவட்டங்களுக்கு இன்று முதல் தொடங்கி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அவைத்தலைவர், மாவட்டச் செயலாளர், துணைச் செயலாளர், மாவட்டப் பொருளாளர், மேலமைப்புப் பிரதிநிதி போன்ற பதவிகளுக்கு வேட்புமனு கட்டணமாக 100 ரூபாயும், செயற்குழு உறுப்பினருக்கு 20 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்தந்த மாவட்ட அலுவலகங்களில் வேட்புமனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரத்தில் இன்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, கட்சியின் ஊர் மற்றும் கிளைத் தேர்தலை தொடங்கி வைத்தார். அப்போது கட்சியினரிடையே அவர் பேசுகையில், ” 1949ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திமுகவிற்கு 15 ஆவது பொதுத் தேர்தல் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா, கருணாநிதிக்கு பிறகு மு.க. ஸ்டாலின் தலைமை பொறுப்பேற்றப் பிறகு நடைபெறும் முதல் தேர்தல். இந்தத் தேர்தல், 2020 பிப்ரவரி 21ஆம் தேதியிலிருந்து மார்ச் 10 ஆம் தேதிவரை நடக்கிறது.

1949 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திமுகற்கு 15 ஆவது பொதுத் தேர்தல் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 88 ஆயிரத்து 398 கிளைகளுக்கு இன்று முதல் தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தல் மூலமாக 16 லட்சத்து 88 ஆயிரத்து 388 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்தியாவிலேயே முறையாகவும், சிறப்பாகவும் தேர்தல் நடத்தும் ஒரே அரசியல் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்தான் ” என்று கூறினார்.

இந்நிகழ்வில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் க. சுந்தர், சி.வி.எம்.பி. எழிலரசன், ஆர்.டி. அரசு, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: 'அரசியலமைப்புச் சட்டத்தை இல்லாமல் ஆக்குவதே சங்பரிவார்களின் நோக்கம்' - சொல்கிறார் திருமா

ABOUT THE AUTHOR

...view details