தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பஞ்சமி நில விவகாரம்: ஆர்.எஸ் பாரதிக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் - DMK leader Stalin

சென்னை: திமுக தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்ய கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, ஆர்.எஸ்.பாரதிக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Chennai High court
Chennai High court

By

Published : Sep 10, 2020, 4:21 PM IST

பஞ்சமி நிலத்தில் முரசொலி அறக்கட்டளையின் அலுவலகம் அமைந்திருப்பதாகவும், அந்த இடத்தின் மூல பத்திரத்தை மு.க ஸ்டாலின் வெளியிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதற்கு அடிப்படை ஆதாரம் இல்லாமல் திமுக மீது குற்றச்சாட்டை முன்வைத்த பாமக நிறுவனர் ராமதாஸுக்கு எதிராக முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ் பாரதி எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

மேலும், முரசொலி அறக்கட்டளையின் மூல பத்திரத்தை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம், அவதூறு வழக்கில் கடந்த மார்ச் 20ஆம் தேதி நேரில் ஆஜராக ராமதாஸுக்கு உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து, இந்த வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியும், தன் மீதான வழக்கு விசாரணையை ரத்து செய்ய கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ராமதாஸ் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மருத்துவர் ராமதாஸ் வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விளக்களித்தும், மறு உத்தரவு வரும் வரை அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன் இன்று (செப்டம்பர் 10) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது முரசொலி அறக்கட்டளை சார்பில் யாரும் ஆஜராகாததால், அவர்கள் தரப்புக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப அறிவுறுத்திய நீதிபதி, விசாரணையை அக்டோபர் 5ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details