தருமபுரி தொகுதி திமுக மக்களவை உறுப்பினரான மருத்துவர் செந்தில் குமாரின் ட்விட்டர் பதிவில், “அடுத்த வாரத்திற்குள் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குத் தமிழ்நாட்டில் பெரும்பாலான தனியார், அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் இருக்காது. மிகவும் கடுமையான சுகாதார சவால் காத்திருக்கிறது” என்று எச்சரிக்கைவிடுத்திருந்தார்.
‘கரோனா படுக்கைகள் காலியாகிறது, அலர்ட்டா இருக்கணும்' - எம்.பி. எச்சரிக்கை! - தருமபுரி எம் பி செந்தில் குமார்
சென்னை: மக்களவை உறுப்பினர் செந்தில் குமார் தமிழ்நாட்டில் கரோனா சிகிச்சையளிக்க படுக்கைகள் இல்லா சூழல் நிலவப்போகிறது என எச்சரித்துள்ளார்.
mp senthilkumar
அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் என கரோனாவுக்கான அனைத்து சிகிச்சை வசதிகளும் இங்குள்ளது என்றும், மக்கள் அது குறித்து பதற்றமடையத் தேவையில்லை எனவும் சுகாதாரத் துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துவரும் நிலையில், மக்களவை உறுப்பினரின் இப்பதிவு கவனிக்கத்தக்கதாகும்.
Last Updated : Sep 11, 2020, 10:46 AM IST