தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மத்திய அரசைக் கையாள்வது குறித்து ஆலோசித்த ஸ்டாலின்! அதிரடியான கூட்டத்தில் திமுக எம்.பி.க்கள்! - anna arivalayam

சென்னை: திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயம் முரசொலி அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.

dmk party

By

Published : Aug 29, 2019, 7:19 PM IST

சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம் முரசொலி அரங்கத்தில் இன்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகின்றது.

கூட்டத்தில் பங்குபெற்ற ஸ்டாலின், துரைமுருகன்

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் திமுக செயல்பாடுகள் குறித்தும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாட்டை எவ்வாறு மக்களிடம் எடுத்துச் செல்வது, மத்திய அரசை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அதோடு தொகுதி நிதியைக் கையாள்வது, அந்த அந்த தொகுதி முக்கிய பிரச்னைகள் குறித்தும் ஆலோசிக்கப்படும் எனவும் சொல்லப்படுகின்றது.

இதில் திமுக தலைவர் ஸ்டாலின், திமுக பொருளாளர் துரைமுருகன், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களான கனிமொழி, டிஆர்.பாலு, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

ABOUT THE AUTHOR

...view details