மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் திமுக தலைமையிலான கூட்டணி 37 இடங்களை கைப்பற்றி அசத்தியுள்ளது. அதில் திமுக மட்டும் 23 இடங்களை கைப்பற்றி நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. மேலும் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அக்கட்சி 13 இடங்களை வென்றுள்ளது.
நாளை நடக்கிறது திமுக எம்.பி.க்கள் கூட்டம் - மக்களவைத் தேர்தல் முடிவுகள்
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நாளை காலை 11 மணிக்கு அக்கட்சியின் எம்.பிக்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது.
anna arivalayam
கருணாநிதி இறந்த பிறகு சந்தித்த முதல் தேர்தலில் இவ்வளவு பெரிய வெற்றி பெற்றுள்ளது அக்கட்சியினரிடையே மிகப்பெரிய உற்சாகத்தை அளித்திருக்கிறது.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் எம்.பி.க்கள் கூட்டம் நாளை காலை 11 மணிக்கு நடைபெற இருக்கிறது. இக்கூட்டத்தில் தேர்தல் முடிவுகள் குறித்தும், நாடாளுமன்றத்தில் செயல்படும் விதம் என பல்வேறு விவகாரங்கள் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.