தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

குடியுரிமைச் சட்டத்தால் நாடே பாதிக்கும் - கனிமொழி எச்சரிக்கை - குடியுரிமைச் சட்டம்

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இசுலாமியர்கள் மட்டுமின்றி அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்படுவார்கள் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறினார்.

kanimozhi
kanimozhi

By

Published : Feb 8, 2020, 2:38 PM IST

சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான கையெழுத்து இயக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். பின்னர் மேடையில் பேசிய கனிமொழி, ” ஒரு போர்க்கால அவசரத்தில் இந்தக் குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதைப்பற்றி படிக்கக்கூட நேரம் அளிக்காமல் இச்சட்டத்தை நிறைவேற்றினர். இந்தியாவில் வரலாறு காணாத அளவில் வேலையின்மை, ஜிடிபி சரிவு உள்ளிட்ட பிரச்சனைகளில், மோசமான நிலையை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிறது.

ஆனால், நாட்டிலுள்ள அன்றாடப் பிரச்னைகளில் இருந்து மக்களை திசைத் திருப்பும் நோக்கத்தோடு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

அதிமுக இந்தச் சட்டத்தை எதிர்த்திருந்தால், இப்போது இதற்காக போராட வேண்டிய சூழலே இருந்திருக்காது

மாநிலங்களவையில் அதிமுக இந்தச் சட்டத்தை எதிர்த்திருந்தால், இப்போது இதற்காக போராட வேண்டிய சூழலே இருந்திருக்காது.

மாணவர்கள் உட்பட அனைவரும் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பாஜக எம்.பிக்கள் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசி வருகின்றனர்.

தேர்தல் ஆணையம் யாரை பிரச்சாரம் செய்யக்கூடாது என்று கூறியதோ, அவரைக் குடியரசுத் தலைவர் உரைக்கு பதிலுரை வழங்கும் நபராக மத்திய அரசு தேர்ந்தெடுக்கிறது.

இது கண்டிக்கத்தக்கது. பிரதமர் மோடிக்கு இரண்டு விஷயம் மட்டுமே தெரியும், ஒன்று பாகிஸ்தான், இன்னொன்று நேரு. மற்ற எதைப்பற்றியும் அவர் பேசுவதில்லை.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கனிமொழி

குடியுரிமைச் சட்டத்தோடு இது நின்றுவிடப் போவதில்லை. அடுத்து குடியுரிமைப் பதிவேடு கொண்டு வர உள்ளனர்.

எனவே, இது இஸ்லாமியர்களுக்கான பாதிப்பு மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் இதன்மூலம் பாதிக்கப்படுவர். ஆண்களை விட பெண்கள்தான் இந்தக் குடியுரிமை சட்டத்தால் அதிகம் பாதிக்கப்படுவர் “ என்றார்.

இதையும் படிங்க: மோடி பேச்சு அரசு பதிவேட்டிலிருந்து நீக்கம்

ABOUT THE AUTHOR

...view details