தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஸ்டாலினுக்கு இனி விளம்பரம் தேவையில்லை - கனிமொழி - stalin doesn't need any advertisement anymore

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இனிமேலும் விளம்பரம் தேட வேண்டிய அவசியம் இல்லை என தூத்துக்குடி எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

mk stalin

By

Published : Aug 13, 2019, 2:25 PM IST

இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி பேசுகையில், 'தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் அறிந்த தலைவர் ஸ்டாலின் என்பதால் அவருக்கு இனிமேலும் விளம்பரம் தேட வேண்டிய அவசியம் இல்லை. நீலகிரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவி செய்யவில்லை என்பதாலேயே ஸ்டாலின் அங்கு சென்றார். இனியாவது மக்களுக்கு உரிய உதவி அளிக்க வேண்டும்' என்று கூறினார்.

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கனிமொழி

தொடர்ந்து பேசிய கனிமொழி, 'நீலகிரியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஏன் இன்னும் பார்வையிடவில்லை என்பதற்கு முதலமைச்சர் பதில் அளிக்க வேண்டும். மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை பெற திமுக தொடர்ந்து வலியுறுத்தி கொண்டு இருக்கிறது. பாஜகவின் ஒரு கையாக செயல்பட்டுவரும் அதிமுக, பாதிப்புக்குள்ளாகி இருக்கும் இந்த சூழலில் தமிழ்நாட்டுக்கான நிதியை மத்திய அரசிடமிருந்து பெற வேண்டும் என கூறினார்.

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள முக்கிய தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே இதை ஆதரித்து பேசுபவர்கள் அங்கு என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ABOUT THE AUTHOR

...view details