தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

திமுக எம்பி வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு - திமுக எம்பி எஸ்.ராமலிங்கம் தொடர்ந்து வழக்கு

மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து திமுக எம்பி எஸ்.ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுக எம்பி எஸ்.ராமலிங்கம் தொடர்ந்து வழக்கு
சென்னை உயர் நீதிமன்றம்

By

Published : Jan 11, 2022, 2:17 PM IST

சென்னை: கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அரசு அணைகள் பாதுகாப்பு சட்டத்தை மக்களவையில் நிறைவேற்றியது. சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்த சட்டம் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சட்டத்தை எதிர்த்து திமுக மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், மாநில அரசின் அதிகார வரம்பில் உள்ள அணைகள் பாதுகாப்பு தொடர்பாக சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தின் மூலம் தேசிய அணைகள் பாதுகாப்பு குழு மற்றும் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் ஆகிய இரண்டு அமைப்புகளை ஏற்படுத்தி நாடு முழுவதும் உள்ள முக்கிய அணைகளை தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்கும் வகையில் மத்திய அரசு இந்த சட்டத்தை நிறைவேற்றி உள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி முனிஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்ததது.

அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென வாதிட்டார். இந்த வழக்கு குறித்து மத்திய அரசு பதிலளிக்க கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன் அவகாசம் கோரினார். இதையடுத்து மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: புதிய நகராட்சிகளுக்கான வாக்காளர் பட்டியல்

ABOUT THE AUTHOR

...view details