தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அடிக்கல் நாட்டிய உதயநிதி ஸ்டாலின் - தேனாம்பேட்டையில் உதயநிதி ஸ்டாலின்

சென்னை தேனாம்பேட்டை மண்டலத்தில் ரூ3.04 கோடி மதிப்பீட்டில் புதிதாக மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் உருவாகவுள்ளது.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

By

Published : Dec 27, 2021, 11:52 PM IST

பெருநகர சென்னை மாநகராட்சியின் தேனாம்பேட்டை மண்டலம் வார்டு 120க்குட்பட்ட முந்தையால் தெருவில் புதிதாக நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையமானது தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கம் மற்றும் மூலதன நிதியின் கீழ் ரூ.3.04 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது.

இந்த ஆரம்ப சுகாதார நிலையம் 700.94 சதுர அளவில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் கட்டப்படவுள்ளது. இந்தப் பணிகள் எட்டு மாத காலத்திற்குள் முடிவுற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கும் திட்டப்பணியினை சேப்பாக்கம் திருவல்லிகேணி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்

இந்நிகழ்ச்சியில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மத்திய வட்டார துணை ஆணையாளர் எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான், தலைமைப் பொறியாளர் (கட்டடம்) எஸ்.காளிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:Competitive examination: அரசுப் பள்ளி மாணவர்கள் போட்டித் தேர்வை எதிர்கொள்ள சிறப்புப் பயிற்சி

ABOUT THE AUTHOR

...view details