சென்னை: தி.மு.க. சிறுபான்மை நல உரிமைப் பிரிவுச் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான மஸ்தான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “திமுக சிறுபான்மை நல உரிமைப் பிரிவின் சார்பில் கட்சியின் தலைவரை வைத்து பொதுக்கூட்டம் நடத்துவது வழக்கமான ஒன்று.

அந்த அடிப்படையில் இந்த ஆண்டும் ஜனவரி 6ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையிலுள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கட்சித் தலைவர் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்தப் பொதுக்கூட்டத்திற்கு எப்போதும் போல் தி.மு.க.வின் தோழமை கட்சித் தலைவர்கள் மட்டுமே சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டிருக்கிறார்கள். மற்றபடி தொலைக்காட்சிகளில் வருவது போன்ற செய்தி உண்மையில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
TAGGED:
ex MP Mastan statement