தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பதவியை இழந்த  திமுக மாமன்ற உறுப்பினர் மீண்டும் செயல்பட அனுமதி - சிட்டி முனிசிபல் கார்ப்பரேஷன்

சென்னை மாமன்றக் கூட்டத்தில் மூன்று மாதங்கள் தொடர்ந்து கலந்துகொள்ளாத காரணத்தால் பதவியை இழந்த 118 வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் மல்லிகா தொடர்ந்து செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மன்ற தீர்மானத்தால் மீண்டும் கவுன்சிலர் ஆனார்
மன்ற தீர்மானத்தால் மீண்டும் கவுன்சிலர் ஆனார்

By

Published : Sep 29, 2022, 7:42 PM IST

பதவியை இழந்த திமுக மாமன்ற உறுப்பினர் மீண்டும் செயல்பட அனுமதி

இந்தியாவின் பழமையான மாநகராட்சிகளில் ஒன்றான சென்னை மாநகராட்சியில் 1919ஆம் ஆண்டு சென்னை சிட்டி முனிசிபல் கார்ப்பரேஷன் சட்டம் கொண்டுவரப்பட்டது. அந்த சட்டத்தின் விதி 53-1(i) படி சென்னை மாநகராட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் பதவியேற்ற காலத்திலிருந்தோ அல்லது இறுதியாக பங்கேற்ற மாமன்ற கூட்டத்திற்கு பிறகோ தொடர்ந்து 3 மாமன்ற கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றால் மன்ற உறுப்பினராக தகுதி இழப்பதாக கருதப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் சென்னை மாநகராட்சியின் 118ஆவது உறுப்பினராக உள்ள மல்லிகா தொடர்ச்சியாக மூன்று மாமன்ற கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதனால் அவர் பதவியை இழந்தார். அதைத்தொடர்ந்து இன்றைய கூட்டத்தில், அமெரிக்காவில் உள்ள தனது மகளுக்கு எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தினால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் அவருக்கு துணையாக இருக்க அமெரிக்க சென்றேன்.

இதன் காரணமாகவே மூன்று மாதமாக நடைபெறும் மாதாந்திர மாமன்ற கூட்டத்திற்கு வரவில்லை என்றும் இந்த நேரத்திலும் தனது வார்டு மக்களுடன் வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்டு மக்களுக்கு வேண்டிய பணிகளை செய்து வந்ததாகவும் விளக்கமளித்தார்.

சென்னை சிட்டி முனிசிபல் கார்ப்பரேஷன் சட்டம் 1919 விதி 53-IV படி மாமன்ற கூட்டத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள் தகுதி இழந்த உறுப்பினர் மீண்டும் கவுன்சிலராக பணியற்ற விரும்பி தீர்மானமாக நிறைவேற்றினால் தகுதி இழப்பு அடைந்த உறுப்பினர் மீண்டும் பணியை தொடரலாம். இதன் அடிப்படையில் மல்லிகா மீண்டும் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதற்கு பெருவாரியான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததால் தீர்மானம் நிறைவேறியது. சென்னை மாநகராட்சியின் வரலாற்றில் இதற்கு முன்னதாக 1998 ஆம் ஆண்டு 113ஆவது வார்டு உறுப்பினராக இருந்த கவுன்சிலரும் தொடர்ந்து மூன்று முறை மாமன்ற கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதே போல் அப்போதும் தீர்மானம் நிறைவேற்ற பட்டு அவருக்கு தொடர்ந்து கவுன்சிலராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது என சென்னை மாமன்ற செயலாளர் தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை அனுமதித்தால் மோதல்கள் ஏற்படலாம் - உயர்நீதிமன்றத்தில் காவல்துறையினர் மறுஆய்வு மனு

ABOUT THE AUTHOR

...view details