தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

திமுக-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொகுதிப்பங்கீடு இழுபறி! - திமுக மாட்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பேச்சுவார்த்தை

சென்னை: திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையிலான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.

cpm
cpm

By

Published : Mar 2, 2021, 12:47 PM IST

திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை, சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் நடைபெற்றது. திமுக சார்பில் டி.ஆர். பாலு, கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆர்.எஸ். பாரதி மற்றும் ஏ.வ.வேலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ஜி. ராமகிருஷ்ணன், சம்பத், சௌந்தரராஜன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

சுமார் 1 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 12 தொகுதிகள் கேட்டதாகவும், ஆனால் திமுக தரப்பில் 5 முதல் 7 தொகுதிகள் மட்டுமே வழங்கக்கூடும் எனக் கூறியதாகவும் தெரிகிறது. இதனால் முதல் கட்ட பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டப்படாமல் முடிந்தது. இதையடுத்து நாளை மீண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் திமுக பேச்சு நடத்தவுள்ளது.

திமுக-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொகுதிப்பங்கீடு இழுபறி!

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவசர ஆலோசனை கூட்டம் இன்று பகல் 1 மணியளவில் அக்கட்சி அலுவலகத்தில் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது. அதில் திமுகவுடன் இன்று நடந்த பேச்சுவார்த்தை குறித்தும், அடுத்தக்கட்ட நகர்வு குறித்தும் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

இதையும் படிங்க: அதிமுகவின் ஆட்சியை மக்கள் விரைவில் அகற்றுவர் - பிருந்தா காரத்

ABOUT THE AUTHOR

...view details