மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கைக்கு (EIA-2020) கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அதனை நாடாளுமன்ற கூட்டத்தொடரைக் கூட்டாமல் நிறைவேற்ற அனுமதிக்கக் கூடாது எனவும், அதுபற்றி விவாதிக்க நிலைக்குழுவை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்றும் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவர் ஜெயராம் ரமேஷுக்கு, திமுக அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ். பாரதி கடிதம் எழுதியுள்ளார்.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை: நிலைக்குழுவைக் கூட்ட திமுக கோரிக்கை - திமுக
சென்னை: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை குறித்து விவாதிக்க நாடாளுமன்ற நிலைக்குழுவைக் கூட்ட வேண்டும் என்று மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ். பாரதி கோரிக்கை விடுத்துள்ளார்.
letter
அக்கடிதத்தில், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை மீது பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளதாகவும், அந்த அறிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதையும் படிங்க: மதன் ரவிச்சந்திரன் மீது உதயநிதி ஸ்டாலின் அவதூறு வழக்கு!