சென்னை பெரம்பூர் அரசுப் பள்ளியில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து அலுவலர்களிடம் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆலோசனை நடத்தினார்.
அதையடுத்து கரோனாவிலிருந்து குணமடைந்த காவல்துறை ஆய்வாளர், களப் பணியாளர்களை கௌரவித்து சான்றிதழ் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயகுமார், "சென்னையில் நாள்தோறும் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுப்படு வருகின்றன" எனத் தெரிவித்தார்.
அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மேலும் அவர் "வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதுவரை 56 விழுக்காடு கூடுதலாக மழைப் பெய்துள்ளது" எனக் கூறினார்.
அதன்பின் அவர், "கேரளா நிலச்சரிவு உயிரிழப்பு சம்பவம் வருத்தமளிக்கிறது. அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க தயாராக உள்ளதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வீட்டுக்குள்ளேயே இருந்து அரசை விமர்சிக்கிறார். கரோனா பணிகளில் முதலமைச்சருடன் ஒப்பிட்டு பார்த்தால் ஸ்டாலின் பூஜ்ஜியம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:'ஸ்டாலின் கூட்டிய அனைத்து கட்சி கூட்டம் எந்த பலனையும் தராது' - ஆர்.பி உதயக்குமார்