தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சைதாப்பேட்டையில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆய்வு - Stalin review in Saidapet

சென்னை: நிவர் புயலால் பாதிக்கப்பட்டுள்ள சைதாப்பேட்டையில் ஆய்வு மேற்கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், 1000 குடும்பங்களுக்கு உணவு உள்ளிட்ட நிவாரண பொருள்களை வழங்கினார்.

DMK leader Stalin
DMK leader Stalin

By

Published : Nov 26, 2020, 4:39 PM IST

வங்கக் கடலில் உருவான நிவர் புயல் நேற்று (நவம்பர் 25) கரையை கடந்தது. இதனால் கடலோர மாவட்டங்களில் கனமழை பொழிந்தது. இந்நிலையில், சென்னையில் நிவர் புயலால் பாதிக்கப்பட்டுள்ள சைதாப்பேட்டை பகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, சைதாப்பேட்டையில் உள்ள கூவம் ஆற்றின் நீரின் அளவை பார்வையிட்டார். அதன் தொடர்ச்சியாக திடீர் நகர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், அங்குள்ள 1000 குடும்பங்களுக்கு தேவையான உதவி பொருள்களை ஸ்டாலின் வழங்கினார். இதேபோன்று, மேச்சேரியில் உள்ள விஜய் நகருக்கு சென்ற ஸ்டாலின், 500 குடும்பங்களுக்கு உதவி பொருள்களை வழங்கினார்.

இதனிடையே, திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டரில், "2015 பெருவெள்ளம், பேரிடர்களிலிருந்து அதிமுக அரசு பாடம் கற்கவில்லை. சிஏஜி அறிக்கையையும் கண்டுகொள்ளவில்லை, நீதிமன்ற தீர்ப்பையும் கடைபிடிக்கவில்லை.

அதிமுக அரசின் மெத்தனத்தால் இழப்பைச் சந்தித்துள்ள அனைத்து தரப்பினருக்கும் உடனடியாக ரூ. 5000 வழங்கி உதவ வேண்டும்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details