தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஸ்டாலின் மன்னிப்பு கேட்பார்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் - திமுக தலைவர் ஸ்டாலின்

அதிமுகவின் பாேராடம் மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்பார் என நம்புவதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின்
திமுக தலைவர் ஸ்டாலின்

By

Published : Jun 1, 2020, 3:30 PM IST

சென்னை திருமுல்லைவாயல் காவல் நிலையம் நாகம்மை நகர் பகுதியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சுமார் 500க்கும் அதிகமான பொதுமக்களுக்கு அதிமுக சார்பில் அத்தியாவசிய பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பங்கேற்று பொதுமக்களுக்கு நிவாரண பெருள்களை வழங்கினார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திமுகவிற்கு எதிரான போராட்டம் ஒருங்கிணைக்கப்பட்ட போராட்டம் அல்ல. தன்னெழுச்சியான போராட்டம். இந்த போராட்டத்தில் அனைத்து தொண்டர்களும் பங்கேற்க வேண்டிய அவசியம் இல்லை. உணர்வுள்ளவர்கள் மட்டும் பங்கேற்கலாம். இந்த போராட்டத்தின் மூலம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்பார் என நம்புறேன்.

பட்டாபிராம் டைட்டல் பார்க், முன்னாள் முதமைச்சர் ஜெயலலிதாவின் கனவு திட்டம். 16 ஆண்டுகளுக்கு பின்னர் ஒரு புதிய டைட்டல் பார்க் உருவாகியுள்ளது. இதனை முதமைச்சர் அடிக்கல் நாட்டி தெடங்கி வைத்தார். ரூ.150 கோடி மதிப்பில் 15 மாதங்களில் இந்த டைட்டல் பார்க் உருவாக உள்ளது.

கரோனா வைரஸ் சூழலில் அரசு செயலிழக்காமல் புதிய 17 பன்னாட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது கிளையை அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களுடன் முதமைச்சர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறார். டைட்டல் பார்க் கட்டி முடிக்கப்பட்ட ஒரு மாதத்தில் இங்கு நிறுவனங்கள் செயல்பட முயற்சி மேற்கொள்ளப்படுகிறது" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details