அம்பேத்கரின் வழி நின்று திமுக தன் கடமையை நிறைவேற்றும் - மு.க. ஸ்டாலின் - dmk
இந்திய நாட்டின் அரசியலமைப்பை வடிவமைக்க காரணமாக இருந்தவர். ஒடுக்கப்பட்டோருக்கு தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட ஒரு மாபெரும் தலைவராக திகழ்ந்தவர் அம்பேத்கர்.

சென்னை: அம்பேத்கரின் வழி நின்று தொடர்ந்து திமுக தன்னுடைய கடமையை நிச்சயமாக நிறைவேற்றும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அண்ணல் அம்பேத்கரின் 130வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின், சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு, திமுக சார்பில் வீர வணக்கம் செலுத்துகிறோம். இந்திய நாட்டின் அரசியலமைப்பை வடிவமைக்க காரணமாக இருந்தவர். ஒடுக்கப்பட்டோருக்கு தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட ஒரு மாபெரும் தலைவராக திகழ்ந்தவர் அம்பேத்கர். அவருடைய வழி நின்று தொடர்ந்து திமுக தன்னுடைய கடமையை நிச்சயமாக நிறைவேற்றும் என்பதை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.