நகைச்சுவை நடிகர் பாண்டு இன்று(மே.6) காலை கரோனா தொற்றால் உயிரிழந்தார். இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், "சிறந்த நகைச்சுவை நடிகரும், ஓவியருமான பாண்டு, கரோனா தொற்றால் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
நகைச்சுவை நடிகர் பாண்டு மறைவு - மு.க.ஸ்டாலின் இரங்கல்! - corona test
கரோனா தொற்றால் நகைச்சுவை நடிகர் பாண்டு உயிரிழந்திருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
![நகைச்சுவை நடிகர் பாண்டு மறைவு - மு.க.ஸ்டாலின் இரங்கல்! DMK leader MK Stalin](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11661405-thumbnail-3x2-sta.jpg)
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
தென்னிந்தியாவிலேயே ஓவிய ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்ற பெருமைக்குரிய பாண்டு, நகைச்சுவையில் தனக்கெனத் தனி பாணியை முத்திரையாகப் பதித்துப் புகழ்பெற்றவர். அவரது மறைவு திரையுலகிற்கு மட்டுமின்றி ஓவிய உலகிற்கும் பேரிழப்பாகும். இந்தநிலையில், அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என, அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கரோனா பாதிப்பால் நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்