இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "அனைத்து வகையிலும் தங்களை வருத்திக் கொண்டு நோன்பிருந்து அன்பு, இரக்கம், கருணை, ஈகை ஆகிய உயரிய பண்புகளை உலகுக்கு வெளிப்படுத்தும் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவருக்கும் திமுக சார்பில் மனமார்ந்த ரமலான் திருநாள் நல்வாழ்த்துகள்.
'இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்புக் கவசம் திமுக'- ஸ்டாலின் - ஸ்லாமியர்
சென்னை: இஸ்லாமிய மக்களுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ரமலான் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் இஸ்லாமிய சமுதாய மக்களுக்காக அயராது பாடுபடும் இயக்கம். 1969-இல் மீலாதுநபிக்கு முதன்முதலில் அரசு விடுமுறை, உருது பேசும் முஸ்லிம்களை பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் சேர்த்தது, சிறுபான்மையினர் நல ஆணையம் துவங்கியது என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
இன்றைக்கு இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு எத்தகைய சோதனைகள் வந்தாலும், அதற்கு எதிர்க்குரல் கொடுக்கும் இயக்கமாக என் தலைமை பாதுகாப்புக் கவசமாக திமுக செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து செயலாற்றிடும் என்று உறுதியளித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.