கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ. அன்பழகன் இன்று காலை காலமானார். சேப்பக்கம் - திருவல்லிக்கேணி திமுக சட்டப்பேரவை உறுப்பினரான ஜெ. அன்பழகனின் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்ரில் இரங்கல் பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில் "இடியும் மின்னலும் ஒருசேர இறங்கியது. மக்கள் பணியில் அர்ப்பணித்துக்கொண்டு, தியாக தீபமாகச் சுடர்விட்டொளிரும் சகோதரர் ஜெ. அன்பழகனை எப்படி மறப்பேன்? நானே தேம்பி அழும் நிலையில், அன்புவின் குடும்பத்தாருக்கும், உடன்பிறப்புகளுக்கும் எப்படி ஆறுதல் சொல்வேன்? இனி எப்போது பாசமுகம் காண்பேன்?" என இரங்கலைத் தெரிவித்துள்ளார்.