தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தாம்பரத்தில் பாஜக நிர்வாகியின் மண்டை உடைப்பு - திமுக பிரமுகர் கைது! - பாஜக மண்டல துணை தலைவரின் மண்டை உடைப்பு

வாக்குச் சேகரிக்கச் சென்ற பாஜக மண்டலத் துணைத் தலைவரின் மண்டை உடைப்பு செங்கலால் தாக்கிய திமுக பிரமுகரைக் கைதுசெய்து, காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.

பாஜக மண்டல துணை தலைவரின் மண்டை உடைப்பு
பாஜக மண்டல துணை தலைவரின் மண்டை உடைப்பு

By

Published : Feb 13, 2022, 9:18 PM IST

சென்னை: தாம்பரம் மாநகராட்சி, 44ஆவது வார்டுக்குள்பட்ட சிட்லபாக்கம் பகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு வாக்குச் சேகரிப்பதற்காக சிட்லபாக்கம் மண்டலத் துணைத் தலைவர் பழனி (46) சென்றிருந்தார்.

அப்போது 44ஆவது வார்டு திமுக உறுப்பினர் கார்த்திக் என்பவர் குடிபோதையில் பாஜக பிரமுகரிடம் தகராறில் ஈடுபட்டு செங்கலை எடுத்து எறிந்து தலையில் காயத்தை ஏற்படுத்தினார்.

இதில் தலையில் காயமடைந்த பாஜக பிரமுகர் தனியார் மருத்துவமனையில் சென்று சிகிச்சைப் பெற்று அங்கு அவருக்கு ஆறு தையல் போடப்பட்டது.

பின்னர் இது குறித்து சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன்பேரில் திமுக பிரமுகர் கார்த்திக் கைதுசெய்யப்பட்டு அவர் மீது இரண்டு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரித்துவருகின்றனர்.

இதையும் படிங்க:'நாம் தமிழரைப் பார்த்து அஞ்சும் திமுக!'

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details