தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் திமுக மும்முரம் - சேலத்தில் ஆலோசனைக் கூட்டம்

சேலம்: தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி தொடர்பாக திமுக நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆலோசனைக் கூட்டம்
ஆலோசனைக் கூட்டம்

By

Published : Nov 5, 2020, 10:49 PM IST

2021 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் திமுக தலைமை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக ஏற்படுத்தப்பட்ட தேர்தல் அறிக்கை குழுவினர், மாவட்டம் தோறும் பயணித்து திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் இன்று (நவம்பர் 5) நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு திமுக பொருளாளரும், எம்.பி.யுமான டி.ஆர்.பாலு தலைமை வகித்தார். அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ் எம்.பி., கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி., டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக் கூட்டம்

திமுகவின் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் எம்எல்ஏ ஆர். ராஜேந்திரன், மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.எம். செல்வகணபதி, கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சேலம் மக்களவை உறுப்பினர் பார்த்திபன் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் திமுக ஆதரவு வணிகர் சங்கங்களின் பிரதிநிதிகள், தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர், லாரி உரிமையாளர்கள், வெள்ளி வியாபாரிகள், இரும்பாலை தொழிலாளர்கள், ஜவுளித் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்துகொண்டு மனுக்கள் வழங்கினர்.

ஆலோசனைக் கூட்டம்

அந்த மனுவில், சேலம் மாநகரில் ஆட்டோ நகரை ஏற்படுத்த வேண்டும் என்று லாரி உரிமையாளர்களும், சேலம் உருக்காலையை தனியார்மயமாக்கக்கூடாது என்று தொமுச நிர்வாகிகளும், எட்டு வழிச்சாலை திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று அதன் எதிர்ப்பு இயக்கத்தினரும் வலியுறுத்தினர்.

ABOUT THE AUTHOR

...view details