தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அதிமுக போல் திமுக அரசும் பொங்கல் தொகுப்பு வழங்க வேண்டும்- ஜெயக்குமார் - Jayakumar

அதிமுக அரசு வழங்கியதை போல பொங்கல் சிறப்பு தொகுப்புடன் நிதியை திமுக அரசு வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

By

Published : Nov 21, 2021, 9:40 PM IST

சென்னை : சென்னை மிண்ட் தங்கசாலை பகுதியில் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாமை பார்வையிட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டை பொறுத்தவரை டீசல் விலை குறைப்பு தொடர்பாக அரசு வாய் திறக்கவில்லை.

நிதியமைச்சர் போகாத ஊருக்கு வழி தேடுவது போல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவசரப்பட்டு வாக்குறுதி கொடுத்து ஏமாற்றினோம் என நிதியமைச்சர் சொல்லிவிட்டு போவது மட்டுமின்றி மக்களை முட்டாள் ஆக்குகிறார்.
தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படுகிறது. நிதி நெருக்கடி இருந்தாலும் கூட அதிமுக அரசை வழங்கியதை போல பொங்கல் தொகுப்புடன் கூடிய நிதியை திமுக அரசு அறிவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இதையடுத்து, “மாணவர்களின் கோரிக்கையான இந்த ஒரு முறை ஆன்லைன் தேர்வு என்பதை அரசு ஏற்க வேண்டும் எனக்கூறிய ஜெயக்குமார், ரோம் நகர் தீ பற்றி எறியும் போது மன்னன் பிடில் வாசித்தார் என்பது போல சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதலமைச்சர் பாராட்டு விழா நடத்துகிறார் எனவும் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டினார்.

இதையும் படிங்க : 'நாங்க இமயமலை, அவங்க பரங்கிமலை' - சீமானை சீண்டும் ஜெயக்குமார்

ABOUT THE AUTHOR

...view details