திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை - ரெய்டு குறித்து எஸ்.பி. வேலுமணி கருத்து - அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை
10:48 August 11
தனக்குத் தொடர்புடைய 60-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்தது பற்றி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசின் அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையின்போது, நியாயத்தின் பக்கம் நின்றும், எனக்கு நம்பிக்கையூட்டும் வகையிலும் எனக்கு ஆதரவாக நின்ற கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ. பன்னீர்செல்வத்திற்கும், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் சட்டப்பேரவை உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், நண்பர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: முன்கூட்டியே கசிந்ததா ரெய்டு... ஆக. 9 இரவில் வேலுமணி எங்கே?