திமுக பொதுச்செயலாளரும் தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியில் தலைவர்களில் ஒருவருமான பேராசிரியர் அன்பழகன் வயது மூப்பின் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக தீவிர அரசியிலில் இருந்து ஒதுங்கி, ஓய்வு எடுத்துவருகிறார். திமுக பொதுச்செயலாளர் என்ற பணியை மட்டும் அறிக்கைகள், அறிவிப்புகள் மூலம் செய்துவருகிறார்.
அன்பழகனுக்கு நேற்றிரவு, திடீரென்று ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.