திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கரோனா அறிகுறிகள் இருந்ததையடுத்து அவருக்குக் கரோனா பரிசோதனைசெய்யப்பட்டது. அதில் அவருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டதாகவும், அதனால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி, அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின.
துரைமுருகனுக்கு கரோனாவா? - மகன் கதிர் ஆனந்த் பதில்
11:28 April 08
சென்னை: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி பொய்யானது என்று அவரது மகன் கதிர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவரது மகன் கதிர் ஆனந்த், "திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கரோனா அறிகுறிகள் மட்டுமே இருந்தது. அதனால் கரோனா பரிசோதனை செய்தோம். அதில் அவருக்கு கரோனா பாதிப்பில்லை என்பது உறுதியாகி உள்ளது. பொய்யான செய்திகளைப் பரப்ப வேண்டாம்" எனத் தெரிவித்தார்.
அண்மையில் திமுக மகளிர் அணிச்செயலாளர் கனிமொழிக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு, குணமடைந்து வீடு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:நாட்டில் புதிய உச்சம் தொட்ட கரோனா