தமிழ்நாட்டில் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கரோனா நோய்த் தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக நன்கொடை வழங்கமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை வைத்தார். அதனடிப்படையில், அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் என பலர் நிதி அளித்து வருகின்றனர்.
இதனிடையே முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கரோனா நோய்த் தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக திமுக அறக்கட்டளை சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி வழங்குப்படும் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.