தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஹெச். ராஜாவிற்கு வக்கீல் நோட்டீஸ்! - பாஜக

சென்னை: திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை இழிவாகப் பேசியதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜாவிற்கு திமுக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

case
case

By

Published : Dec 31, 2019, 7:52 PM IST

பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா கடந்த 25ஆம் தேதி வெளியான தனியார் நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்தார். அதில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் மூத்த வழக்கறிஞர்களை மிகவும் இழிவாக விமர்சித்து பேட்டி அளித்ததாகவும், எனவே அதற்கு மன்னிப்புக் கேட்க, திமுக தேர்தல் பணிக் குழுச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான புகழேந்தி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

எச். ராஜாவிற்கு திமுக அனுப்பியுள்ள வக்கீல் நோட்டீஸ்

அதில், ’குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து மு.க. ஸ்டாலின், மத வெறியைத் தூண்டிக் கலவரத்தை உண்டாக்க நினைக்கிறார்’ என ஹெச். ராஜா தெரிவித்திருப்பதுடன், மூத்த வழக்கறிஞர்களையும் 'அறிவிலிகள்' எனக்கூறி வார்த்தைகளால் அவதூறு செய்துள்ளார். எனவே, இதற்கு 15 நாட்களுக்குள் அவர் மற்றும் அவர் பேட்டியளித்த தனியார் நாளிதழ் ஆசிரியரும் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் சட்டப்படி சிவில் வழக்கு பதியப்படும் ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ’மோடியும் அமித்ஷாவும் மாற்றி மாற்றி பேசுகின்றனர்’

ABOUT THE AUTHOR

...view details