தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

திமுக தேர்தல் அறிக்கை பொய்யும் புரட்டும் நிறைந்தது- எல். முருகன் - DMK election manifesto

திமுக தேர்தல் அறிக்கை பொய்யும் புரட்டும் நிறைந்தது என பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் விமர்சித்துள்ளார்.

BJp candidate list திமுக தேர்தல் அறிக்கை முருகன் திமுக பாஜக வேட்பாளர் பட்டியல்
BJp candidate list திமுக தேர்தல் அறிக்கை முருகன் திமுக பாஜக வேட்பாளர் பட்டியல்

By

Published : Mar 14, 2021, 1:30 PM IST

Updated : Mar 14, 2021, 7:28 PM IST

மதுரை திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதி திமுக எம்எல்ஏ சரவணன் இன்று பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் தலைமையில் பாஜகவில் இணைந்தார்.

அப்போது, “திமுகவின் தேர்தல் அறிக்கையில் எதையும் சொல்வார்கள். சொன்ன பிறகு அதனை மறந்து விட்டு கட்டப் பஞ்சாயத்து, நில அபகறிப்பு, ஊழல் என்று பிரதானமாக வைத்திருப்பார்கள். திமுகவின் தேர்தல் அறிக்கை பொய்யும் புரட்டும் நிறைந்தது” என்றார். தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் உள்கட்சி பிரச்சினை குறித்து பதிலளிக்கையில், “காங்கிரஸில் உள்கட்சி பிரச்சினை இல்லையென்றால்தான் அது செய்தி” என்றார்.

இதையடுத்து சசிகலா குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், சசிகலா தண்டனை அனுபவித்து வந்துள்ளார். தற்போது அரசியலிலே இல்லை” என்றார்.

வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுதிகளில் யார் யார் போட்டியிடுகிறார்கள் என்ற வேட்பாளர்கள் பெயர் பட்டியல் இன்று (மார்ச் 14) மதியம் 2.30 மணிக்கு வெளியாகிறது. இதனை பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் வெளியிடுகிறார்.

இதையும் படிங்க : பாஜகவில் இணைந்த திமுக எம்எல்ஏ சரவணன்

Last Updated : Mar 14, 2021, 7:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details