தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - DMK

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

By

Published : Jun 24, 2021, 12:53 PM IST

Updated : Jun 24, 2021, 1:59 PM IST

12:47 June 24

உள்ளாட்சித் தேர்தல் குறித்து விவாதிக்க திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் (ஜூன் 26) மாலை 5 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் (ஜூன் 26) மாலை 5 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் கூட்டம் நடைபெறும் என்றும், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடைபெறும் எனறும் அதில் கூறப்பட்டுள்ளது. 

மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் விடுபட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Last Updated : Jun 24, 2021, 1:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details