தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கருணாநிதி பிறந்தநாள்: மே 28 திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - திமுக தலைவர் ஸ்டாலின்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மே 28 ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

By

Published : May 23, 2022, 2:03 PM IST

சென்னை: திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் இன்று (மே 23) வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர், பொறுப்பாளர்கள் கூட்டம் வரும் சனிக்கிழமை (மே 28) காலை 10.30 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள 'கலைஞர் அரங்கத்தில்' நடைபெறும்.

இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர், பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

வரும் ஜூன் 3 ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இக்கூட்டம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கலைஞர் வேளாண் வளர்ச்சித் திட்டம்: தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details