தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 13, 2020, 12:23 PM IST

Updated : Aug 13, 2020, 5:38 PM IST

ETV Bharat / city

திமுகவில் இருந்து கு.க.செல்வம் நிரந்தரமாக நீக்கம்!

ku ka selvam
ku ka selvam

12:19 August 13

சென்னை: ஆயிரம் விளக்கு சட்டப்பேரவை உறுப்பினர் கு.க. செல்வம் திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னயில் விஐபி சட்டப்பேரவை தொகுதிகளில் ஒன்றாக கருதப்படும் ஆயிரம் விளக்கு சட்டப்பேரவை உறுப்பினர் கு.க. செல்வம் கடந்த வாரம் டெல்லியில் பாஜக தலைவர் நட்டாவைச் சந்தித்தார்.

அதைத்தொடர்ந்து அவர் கட்சியில் இருந்த தற்காலிகமாக நீக்கப்பட்டார். இந்நிலையில், கு.க. செல்வம் திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆயிரம் விளக்கு சட்டப்பேரவை உறுப்பினர் கு.க. செல்வம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கழகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுவந்ததார்.

இது குறித்து அவரிடம் கேட்கப்பட்ட விளக்கத்திற்கு அவரது பதில் ஏற்றுக் கொள்ளும்படி இல்லாத காரணத்தினால், அவர் திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சென்னை ஆயிரம் விளக்கு சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள கு.க. செல்வம், 1997இல் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தவர். கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுகவின் வி.ஐ.பி தொகுதியாக கருதப்படும் ஆயிரம் விளக்கில் நின்று வெற்றி பெற்றதன் மூலம் முதல் முறையாக சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வானார்.

கு.க. செல்வம் கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை டெல்லியில் சந்தித்து பேசினார். அடுத்த நாள் கமலாலயத்தில் நடைபெற்ற ராமர் பூஜையில் காவி துண்டு அணிந்து பங்கேற்றார்.

இதைத் தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினர் கு.க செல்வம் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதால் அவரை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கி வைப்பதோடு, ஏன் அடிப்படை உறுப்பினர் பதிவியில் இருந்து நீக்கக்கூடாது என விளக்கம் கேட்டு ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுருந்தார்.

இதற்கு விளக்கமளித்து கு.க. செல்வம் வெளியிட்ட அறிக்கையில், திமுகவில் இருந்து தான் (தற்காலிகமாக) நீக்கப்பட்டது ஒருதலைபட்சமான நடவடிக்கை என்றும் இது இயற்கை நீதிக்கு எதிரானது என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தமிழ்நாட்டில் தடை!

Last Updated : Aug 13, 2020, 5:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details