சென்னை:திமுகவின் கழக அமைப்பு ரீதியிலான அனைத்து இடங்களுக்கும் தேர்தல் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட பொதுத் தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாவட்டச் செயலாளர் தேர்தல் முடிந்தவுடன் நடக்க உள்ள திமுக பொதுக்குழுவில், துணை பொது செயலாளர்கள் எண்ணிக்கையை உயர்த்தி அறிவிக்கவும் திமுக திட்மிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், சுப்புலட்சுமியின் கணவர் ஜெகதீசன் திமுகவை கடுமையாக விமர்சித்து கருத்து பதிவிட்டு வருவதை அடுத்து சுப்புலட்சுமி திமுக துணை பொது செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அவர் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் மூலம் 1977-ல் அரசியலுக்கு அடையாளம் காட்டப்பட்ட சுப்புலட்சுமி ஜெகதீசன், கொடுமுடியில் பள்ளி ஆசிரியராக பணியாற்றியவர் ஆவார். இவரை எம்ஜிஆர் மூலம் அரசியலில் அறிமுகம் செய்யப்பட்டு 1977 இல் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். எம்ஜிஆர் அமைச்சரவையில் 1978 முதல் 1980 வரை கைத்தறித்துறை அமைச்சராக இருந்தார். 1980-ல் திமுகவில் இணைந்து பின், 1984-ல் திமுக சார்பில் ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
1989 தேர்தலில் ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று கருணாநிதி அமைச்சரவையில் 1991 வரை சமூக நலத்துறை அமைச்சராக இருந்தார். 1991-ல் வெள்ளக்கோவில் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 1993 மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 1996-ல் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நெருப்பாற்றில் இருப்பது போல் அரசியலில் பெண்கள் - சுப்புலட்சுமி ஜெகதீசன்