தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து - மு.க.ஸ்டாலின் வரவேற்பு! - பத்தாம் வகுப்பு

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ததற்காகவும், அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்ததற்காகவும் மனப்பூர்வமான வரவேற்பைத் தெரிவித்துக் கொள்வதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

stalin
stalin

By

Published : Jun 9, 2020, 3:38 PM IST

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரடங்கு நேரத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டதிலிருந்து, 9 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் உயிர் பாதுகாப்புக் கருதி, அந்தத் தேர்வைத் தள்ளிவைக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளும், ஆசிரியர்கள் பெற்றோர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் அ.தி.மு.க. அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்கள்.

அரசு தொடர்ந்து தேர்வை ரத்து செய்யாமல் இருந்த நிலையில், உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டது. நேற்று அந்த வழக்கு விசாரணையின் போது, பத்தாம் வகுப்புத் தேர்வை நடத்தியே தீருவோம் என்று அரசு அடம்பிடித்தது. இந்நிலையில், திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஆலோசித்து, அதிமுக அரசின் மாணவர் விரோதப் போக்கினை கண்டிக்கும் வகையில், 10ஆம் வகுப்புத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நாளை (ஜூன்.10) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை மாநிலம் முழுவதும் நடத்துவது என்று நேற்று அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, இன்று(ஜூன்.9) பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். எனவே, பொதுத் தேர்வை ரத்து செய்ததற்காகவும், மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்ததற்காகவும் மனப்பூர்வமான வரவேற்பைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இது தொடர்பாக நாளை திமுக தோழமைக் கட்சிகள் நடத்தவிருந்த ஆர்ப்பாட்டமும் ரத்து செய்யப்படுகிறது “ எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - முதலமைச்சர் பழனிசாமி

ABOUT THE AUTHOR

...view details