தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

’பச்சைத்துண்டு பழனிசாமி அல்ல; பச்சைத்துரோக பழனிசாமி’

விழுப்புரம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு விவசாயிகளுக்கு பச்சைத் துரோகம் செய்வதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

dmk
dmk

By

Published : Nov 10, 2020, 7:34 PM IST

Updated : Nov 10, 2020, 8:22 PM IST

விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தமிழகம் மீட்போம் சிறப்பு பொதுக்கூட்டம் மற்றும் கட்சி முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி, கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலமாக கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

அப்போது பேசிய அவர், " நான் திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் கலந்து கொண்ட முதல் கூட்டம் விழுப்புரத்தில் தான் நடந்தது. நான் தொடர்ந்து பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக கடுமையாக உழைத்து வருகிறேன். வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கியது திமுகதான். எடப்பாடி பழனிசாமிக்கு எந்த சமூகத்தின் மீதும் அக்கறை இல்லை. வேளாண் சட்டத்திருத்த மசோதாவை ஆதரித்தவர்தான் பழனிசாமி. அவர் பச்சைத்துண்டு போட்டு மக்களை ஏமாற்றி வருகிறார். அவர் பச்சைத்துண்டு பழனிசாமி அல்ல; பச்சை துரோக பழனிசாமி.

முதலமைச்சரிலிருந்து, அமைச்சர்கள் வரை கொள்ளையடிக்கவே வந்துள்ளனர். நீட் தேர்வு, 7 பேர் விடுதலை விவகாரம், ஜெயலலிதா மரணம் குறித்த வழக்குகளில் தீர்வு பெற்று தராதது சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் செய்த துரோகம்.

’பச்சைத்துண்டு பழனிசாமி அல்ல; பச்சைத்துரோக பழனிசாமி’

தமிழக சட்டத்துறைக்கு சாத்தான்குளம் சம்பவமே சாட்சி. கிரிமினல்கள் கையில் கோட்டை சென்று விட்டது. பாஜகவுக்கு அடிமை சாசனம் செய்யவில்லையென்றால் பழனிசாமி, பன்னீர்செல்வம், வேலுமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்டவர்கள் சிறை சென்றிருப்பார்கள் " என்றார்.

இந்நிகழ்வில் மாநில துணை பொதுச்செயலாளர் க.பொன்முடி, கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கௌதம சிகாமணி, விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் புகழேந்தி, செஞ்சி, மயிலம் மற்றும் திண்டிவனம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:'கல்குளம் - பாம்பூரி வாய்க்காலின் குறுக்கே தடுப்பணை' : முதலமைச்சர் பழனிசாமி

Last Updated : Nov 10, 2020, 8:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details