தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கரோனா பாதிப்பு: அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய திமுக! - அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிவாரணநிதி

சென்னை: "கரோனா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்டுள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவிடும் வகையில், திமுக எம்எல்ஏக்களும், எம்பிக்களும் தங்களது ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குவார்கள்" என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

MLA & MP's Salary to unorganised sector employees
MLA & MP's Salary to unorganised sector employees

By

Published : Mar 22, 2020, 3:38 PM IST

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கரோனா தொற்று நோய் பரவலால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவிடும் வகையில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களும், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களும் தங்களது ஒரு மாதச் சம்பளத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குவார்கள்.

தமிழ்நாடு அரசும் உடனே போதிய நிதி ஒதுக்கீடு செய்து, அமைப்பு சாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிட முன்வரவேண்டும். தமிழ்நாட்டில் உள்ள தொழிலதிபர்களும், இந்த மனிதநேய முயற்சியில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும்.

கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக, தமிழ்நாடு அரசு கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும். கரோனா தொடர்பாக மத்திய - மாநில அரசுகள் வெளியிடும் சுய ஊரடங்கு உள்ளிட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் இன்று போல் மக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கி, மிகுந்த விழிப்புணர்வுடனும் சுய சுகாதாரத்தைக் கடைப்பிடித்தும், கரோனா தொற்று நோய் பரவலை முழுமையாகத் தடுத்திட வேண்டும் என்றும் மு.க. ஸ்டாலின் அந்த அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க:கரோனா எண்ணிக்கை அதிகரிப்பதைக் கண்டு அஞ்ச வேண்டாம் - கெஜ்ரிவால்

ABOUT THE AUTHOR

...view details