விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினருமான தொல். திருமாவளவன் இன்று (ஆக. 17) தனது 59ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.
தொல்.திருமாவளவனனுக்கு இன்று காலை முதலே பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின், திருமாவளவனனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "பழைமைவாதம், மூட நம்பிக்கை, சமூக, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை உறுதியாக எதிர்த்து நின்று, ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குப் போராடும் 'எழுச்சித்தமிழர்', 'சமத்துவப் பெரியார்' தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்பு, வி.சி.க தலைவர் திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தமிழ்ப் பலகை அகற்றப்பட்டதா? தென்னக ரயில்வே சொல்வது என்ன?