இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கூட்டறிக்கையை பதிவிட்டுள்ளார். அதில், “ டெல்லியை முற்றுகையிட்டு பல லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், அந்த மகத்தான பேரணியை மதிக்காமல் சர்வாதிகார போக்குடன் மத்திய பாஜக அரசு அவர்களுடனான பேச்சுவார்த்தைக்கு நிபந்தனை விதிக்கிறது.
குறைந்தபட்ச ஆதார விலை, இலவச மின்சாரம் இல்லை என்று அடுக்கடுக்கான துரோகத்தை செய்து விவசாயிகளின் கண்களை பிடுங்கியுள்ள மோடி அரசு, தடியடி, கண்ணீர் குண்டு வீச்சு, பேச்சுவார்த்தைக்கு நிபந்தனை என அவர்களை ஒடுக்கிவிட கச்சை கட்டிக்கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது.