தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டி

தேமுதிக தனித்து போட்டி
தேமுதிக தனித்து போட்டி

By

Published : Sep 15, 2021, 12:00 PM IST

Updated : Sep 15, 2021, 1:05 PM IST

11:57 September 15

உள்ளாட்சி தேர்தல் குறித்து தேமுதிக வெளியிட்ட அறிக்கை

சென்னை: தமிழ்நாடு ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது. நாளை (செப் 16) முதல் இரண்டு நாட்களுக்கு தேமுதிக சார்பில் போட்டியிடுபவர்களுக்கு விருப்ப மனு விநியோகம் செய்யப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் தனித்துப் போட்டியிடுகிறது.

இதில் போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும், கட்சி தொண்டர்களும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் விருப்ப மனுக்களை 16.09.2021, 17.09.2021 ஆகிய இரண்டு நாட்கள் காலை 10 மணியிலிருந்து அந்தந்த மாவட்ட தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுவைப் பெற்று பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை, அந்தந்த மாவட்ட கட்சி தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

Also Read:உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி- பாமக திடீர் அறிவிப்பு

ஊரக உள்ளாட்சித் தேர்தலில், தேமுதிக சார்பில் போட்டியிடுவதற்குரிய விருப்ப மனு அளிப்பதற்கு, கட்சியின் நிர்வாகிகளாக இருப்பவர்களும், அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்களாகும்.

மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் விண்ணப்பத்திற்கான கட்டணத் தொகை ரூ.4,000 எனவும், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் விண்ணப்பத்திற்கான கட்டணத் தொகை ரூ.2,000 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Sep 15, 2021, 1:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details