தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'2 நாள்களில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவடையும்' - தேமுதிக - Parthasarathy byte in Chennai

சென்னை: "தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இன்னும் இரண்டு நாள்களில் நிறைவடையும்" என்று தேமுதிக மாநில துணைச் செயலாளர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.

'2 நாள்களில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவடையும்' - தேமுதிக
'2 நாள்களில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவடையும்' - தேமுதிக

By

Published : Mar 5, 2021, 6:15 PM IST

சென்னை தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில துணைச் செயலாளரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான பார்த்தசாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், "தலைமைக் கழகம் ஏற்கனவே அறிவித்தப்படி, நாளை (மார்ச் 6) முதல் மார்ச் 8 வரை விருப்பமனு செய்தவர்களுக்கான நேர் காணல் நடைபெறும்.

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் விருப்ப மனு வழங்கி உள்ளனர். தொடர்ந்து, கூட்டணி பேச்சு வார்த்தை இரண்டு கட்டமாக நடைபெற்று வருகிறது. தேமுதிக பேச்சுவார்த்தைக்குழு தங்களுக்குரிய தொகுதிகளின் எண்ணிக்கையை எடுத்துக்கூறி வருகிறது" என்று தெரிவித்தார்.

தொகுதி பங்கீட்டில் பிரச்னை இல்லை;

தொடர்ந்து, "தொகுதி பங்கீடு எப்போது இறுதி செய்யப்படும்?" என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்க்கு, "இரண்டு நாள்களில் கூட்டணி பேச்சு வார்த்தை முடியும். கூட்டணிப் பேச்சுவார்த்தையில் எந்த ஒரு பிரச்னையும் இல்லை. அதிமுக நாடாளுமன்ற மேலவைக்கு ஒரு இடம் கொடுப்பதாக ஒப்புக்கொண்டுள்ளனர்" என்று பதிலளித்தார்.

இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில், 15 சட்டப்பேரவை தொகுதிகளும் ஒரு மேலவை இடமும் கொடுப்பதாக அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், தேமுதிக இதற்கு சம்மதிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தேமுதிக ஏற்கனவே 41 தொகுதிகள் கேட்ட நிலையில், தற்போது 18 தொகுதிகளும் ஒரு மேலவை சீட்டும் கேட்டு வலியுறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details