தேமுதிக ஆலோசனைக் கூட்டம் அக்கட்சித் தலைமை அலுவலகத்தில் காலை 10.45 மணி அளவில் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் எல்.கே. சுதீஷ், கட்சியின் அனைத்து மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவருவதால் கூட்டணி குறித்தும், கட்சி விவகாரங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. மேலும் எந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்கலாம், எவ்வளவு தொகுதிகள் பங்கீடு கேட்கலாம் என்பது குறித்தும் நிர்வாகிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது.
தொடர்ந்து தேமுதிக கட்சி நிர்வாகிகள் மாற்று கட்சிகளில் இணைந்துவருவதால் கட்சி பலவீனம் அடைந்துவருவதை எப்படி தடுப்பது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் நீண்ட இழுபறிக்குப் பிறகு அதிமுக கூட்டணியில் தேமுதிக கட்சி இடம்பெற்றது.