தேமுதிக தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா ஆகியோரின் புகழுக்கும் மரியாதைக்கும் குந்தகம் விளைவிக்கும் நோக்கத்தில், தமிழ் நாளிதழ் ஒன்று கார்ட்டூன் செய்தி வெளியிட்டதாகக்கூறி பல்வேறு இடங்களில் அந்த நாளிதழை தேமுதிகவினர் தீயிட்டுக் கொளுத்தி முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் ஒரு பகுதியாக விஜயகாந்த் குறித்து அவதூறு செய்தி வெளியிட்டதாக, அந்த நாளிதழ் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.