தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'ஜனவரியில் தேமுதிக கூட்டணி உறுதி': பிரேமலதா விஜயகாந்த் - dmdk founder vijayakanth

சென்னை: வரும் ஜனவரியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் யாருடன் கூட்டணி என்பதை உறுதி செய்வார் என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

premalatha-vijayakanth
premalatha-vijayakanth

By

Published : Dec 13, 2020, 1:06 PM IST

தேமுதிக மாவட்டச் செயலாளர் கூட்டம், சென்னை - கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதில், தேமுதிக தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, துணை பொதுச்செயலாளர் எல்.கே. சுதீஷ் உள்ளிட்ட 68 மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அப்போது பேசிய பிரேமலதா விஜயகாந்த், "எல்லா தொகுதிகளுக்கும் கட்சியினர், நேரடியாகச் சென்று மக்கள் பணியாற்ற வேண்டும். இன்று முதல் தேர்தல் பணித் தொடங்கிவிட்டது. ஜனவரி மாதம் பொதுக்குழுக் கூட்டம், செயற்குழுக் கூட்டம் நடைபெறும்.

பிரேமலதா விஜயகாந்த்

அப்போது விஜயகாந்த் யாருடன் கூட்டணி என்பதை அறிவிப்பார். வரும் சட்டப்பேரவைத் தேர்தல் தமிழ்நாட்டின், முக்கியமான தேர்தல். விஜயகாந்த் முன்புபோல சுறுசுறுப்பாக இல்லை என்றாலும் தேர்தல் பரப்புரையில் முக்கியப் பங்கு வகிப்பார்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:'டெல்லியில் போராடும் விவசாயிகளை அழைத்துப் பேசுங்கள்' - பிரேமலதா வலியுறுத்தல்!

ABOUT THE AUTHOR

...view details